தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேவர் குருபூஜை: திறந்தநிலை வாகனங்களில் வர தடை

தேவர் குருபூஜை: திறந்தநிலை வாகனங்களில் வர தடை

தேவர் குருபூஜை: திறந்தநிலை வாகனங்களில் வர தடை


ADDED : அக் 05, 2024 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு வாடகை வாகனங்கள், திறந்த நிலை வாகனங்களில் வருவதற்குதடை விதிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாதொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவகலத்தில் நேற்று நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது:

மாவட்டத்தில் தற்போதுஅமலில் உள்ள பிரிவு 163(1) தடை உத்திரவின் படிபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவிற்கு வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனம் ஆகியதிறந்த வெளிவாகனங்களில் வந்து கலந்து கொள்ள அனுமதி இல்லை.

சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., அலுவலகங்களில் வாகன அனுமதிச் சீட்டு பெற வேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்குவிடக்கூடாது.

வழித்தடத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்தந்தமாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அக்.,29, 30ல் கமுதிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தரப்படும். விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.

எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us