ADDED : நவ 01, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு சாத்தங்குடி வெள்ளாங்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இவ்விழாவில் சாத்தங்குடி வெள்ளாங்குளம், என்.பாடுவேனேந்தல், கண்டேன் கனி, ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

