/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவபாஷாணத்திற்கு சிறப்பு பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்
/
நவபாஷாணத்திற்கு சிறப்பு பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்
நவபாஷாணத்திற்கு சிறப்பு பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்
நவபாஷாணத்திற்கு சிறப்பு பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 22, 2025 11:57 PM
ஆர்.எஸ்.மங்கலம்; தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு ஆடி, தை அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
நாளை( ஜூலை 24) ஆடி அமாவாசை தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நவபாஷாணத்திற்கு ஏராளமான பக்தர்கள் செல்வர்.
போதிய பஸ்கள் இல்லாததால் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் கூடுதல் பணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே பக்தர்களின் நலன் கருதி நாளை காலை நேரத்தில் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து நவபாஷாணத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.