தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் குவிந்தனர் பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் குவிந்தனர் பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் குவிந்தனர் பக்தர்கள்


ADDED : ஜூலை 21, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 01:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: விடுமுறை நாளையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இங்கு வந்த பக்தர்கள் கோயில் அக்னி தீர்த்த கடலில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து விட்டு புனித நீராடினர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர்.

இதன்பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் தரிசனம் செய்தனர். ஆடித் திருக்கல்யாணம் 2ம் நாள் விழா யொட்டி காலையில் கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா வந்தார்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்தம் கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us