/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகாளய அமாவாசை வழிபாடு சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
/
மகாளய அமாவாசை வழிபாடு சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசை வழிபாடு சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசை வழிபாடு சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
ADDED : செப் 22, 2025 03:18 AM

திருப்புல்லாணி : -திருப்புல்லாணி அருகேயள்ள சேதுக்கரை சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கடலில் புனித நீராடினர். முன்னோர்களை நினைத்து திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர்.
சேதுக்கரையில் உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அருகே உள்ள வெள்ளைப் பிள்ளையார் மற்றும் அகத்தியர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். சிதறுதேங்காய் உடைத்தனர்.
பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இதுபோன்று திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப் பட்டது.