/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவன் கோயில் அருகே கழிவுநீர் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதி
/
சிவன் கோயில் அருகே கழிவுநீர் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதி
சிவன் கோயில் அருகே கழிவுநீர் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதி
சிவன் கோயில் அருகே கழிவுநீர் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதி
ADDED : நவ 07, 2025 03:44 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் முகவை ஊருணி தென்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் அருகே பல நாட்களாக ரோட்டில் கழிவுநீர் ஓடுவதால் துர்நாற்றத்தால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
முகவை ஊருணி தென்கரையில் பழமை வாய்ந்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோயில், ஆஞ்சநேயர் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட விேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயில் எதிரே ரோட்டில் பல நாட்களாக கழிவுநீர் திறந்த வெளியில் ஓடுகிறது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் கண்டு கொள்ளவில்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். துர்நாற்றத்தால் நோய் தொற்று அபாயம் உள்ளதால் உடனடியாக கழிவு நீரை அகற்றி குழாயை மாற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.