/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விதைப்பந்துகளை தயார் செய்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
விதைப்பந்துகளை தயார் செய்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
விதைப்பந்துகளை தயார் செய்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
விதைப்பந்துகளை தயார் செய்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 07, 2025 03:44 AM

ராமநாதபுரம்: பட்டணம்காத்தான் நபீசா அம்மாள் மெட்ரிக் பள்ளி மாணாவர்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் முயற்சியாக 2650 விதைப்பந்துகளை தயாரித்து வனத்துறையில் ஒப்படைத்துள்ளனர். அவர்களை அதிகாரிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
நபீசா அம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கடந்த ஆக., மாதம் 2650 விதைப்பந்துகளை தயார் செய்தனர். அவை முறையாக பள்ளியில் பராமரிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜெயந்தி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பள்ளி நிர்வாக இயக்குநர் அப்துல் முனாப் ஆகியோர் முன்னிலையில் பள்ளி முதல்வர் முகமது யூசப், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரால் ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விதைப்பந்துகள் நமது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துாவப்படும். ஒவ்வொரு விதையையும் ஒவ்வொரு விருட்சமாக மாற்றக்கூடிய இந்த முயற்சியை மேற்கொண்ட மாணவர்களை மாவட்ட கல்வித்துறை, வனத்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் பாரட்டினர்.

