ADDED : செப் 15, 2025 06:01 AM

முதுகுளத்துார்,: முதுகுளத்துார் அருகே பூங்குளத்தில் பூரணதேவி, புஷ்கலாதேவி உடனுறை அய்யனார், சேதுமாகாளி, தட்சிணாமூர்த்தி மாடன், கருப்பணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், ஏனாதி கிராமத்தில் உள்ள முத்து கருப்பணசுவாமி உள்பட பரிவார தெய்வங்களுக்கு ஆவணி மாத களரி விழாவை முன்னிட்ட கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தினந்தோறும் பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். இதை முன்னிட்டு ஏனாதி கிராமத்தில் இருந்து பூஜை பெட்டி ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் வைத்து வழிபட்டனர்.
பின்பு மயான கொள்ளை பூஜை, அக்னி மாடனுக்கு காவு கொடுத்தல் பூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.