/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடிய விடிய வேல் குத்தி அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள்
/
விடிய விடிய வேல் குத்தி அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள்
விடிய விடிய வேல் குத்தி அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள்
விடிய விடிய வேல் குத்தி அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள்
ADDED : ஆக 17, 2025 12:26 AM

கமுதி: கமுதி அருகே கருங் குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயிலுக்கு விடிய விடிய வேல் குத்தி யும், அக்னிச்சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி அருகே கருங் குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் ஆடி முதல் தேதியில் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காப்பு கட்டி கோயில் அருகே கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வந்தனர்.
பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். நேற்று முன்தினம் விடிய விடிய கருங்குளம் கிராமத்தில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான பக்தர்கள் வேல் குத்தியும், அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சந்தன மாரியம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட 16 வகை அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
நிறைவு நாள் விழாவில் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட கூடாரத்தின் அருகே பக்தர்கள் சேவல்,ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.