/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தாலுகாவில் 33,656 பேருக்கு குடற்புழு மாத்திரைகள்
/
திருவாடானை தாலுகாவில் 33,656 பேருக்கு குடற்புழு மாத்திரைகள்
திருவாடானை தாலுகாவில் 33,656 பேருக்கு குடற்புழு மாத்திரைகள்
திருவாடானை தாலுகாவில் 33,656 பேருக்கு குடற்புழு மாத்திரைகள்
ADDED : ஆக 11, 2025 10:06 PM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் 177 மையங்களில் 33,656 பேருக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டது. தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயை கட்டுப்படுத்த குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
நேற்று திருவாடானை தாலுகாவில் இப்பணிகள் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கூறியதாவது:
குடற்புழுக்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உடல் நலக்கேடுகளை ஏற்படுத்துகின்றன.
எனவே இந்த மாத்திரையை காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை காலை உணவு அல்லது மதிய உணவு சாப்பிட்ட பிறகு நன்றாக கடித்து மென்று சாப்பிட வேண்டும்.
இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது.
திருவாடானை தாலுகாவில் திருவாடானையில் அரசு கலைக்கல்லுாரி, அரசு தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி என 142 பள்ளிகளிலும், 133 அங்கன்வாடி மையங்களிலும் 33 ஆயிரத்து 656 பேருக்கு குடற்புழு மாத்திரை வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக.,18 ல் வழங்கப்படும் என்றார்.