/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை அருகே சிதிலமடைந்த சிவன் கோயில் : புனரமைக்க வலியுறுத்தல்
/
திருவாடானை அருகே சிதிலமடைந்த சிவன் கோயில் : புனரமைக்க வலியுறுத்தல்
திருவாடானை அருகே சிதிலமடைந்த சிவன் கோயில் : புனரமைக்க வலியுறுத்தல்
திருவாடானை அருகே சிதிலமடைந்த சிவன் கோயில் : புனரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 19, 2025 09:29 PM

திருவாடானை: திருவாடானை அருகே மாஞ்சூரில் பழமை வாய்ந்த ஹரஹர திருவர ஈஸ்வரமூர்த்தி கோயில் பராமரிப்பின்றி, கருவறை உட்பட கட்டுமானங்கள் சிதிலமடைந்துள்ளன. கோயிலை புனரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாடானை தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் பாண்டிய, சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நிறைய கோயில்கள் கட்டப்பட்டன.
கோயிலில் நித்ய பூஜை செய்யவும், பராமரிப்புக்கும், பூஜைக்கு தேவையான பொருட்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.
மேலும், பூஜை செய்பவர்களின் வாழ்வாதாரத்திற்காக நிலங்கள் வழங்கப்பட்டன. திருவாடானை அருகே மாஞ்சூர் கிராமத்தில் ஹரஹர திருவர ஈஸ்வரமூர்த்தி, வல்லபநாயகி அம்மன் கோயில் உள்ளது.
மன்னர்கள் காலத்தில் கட்டபட்ட இக்கோயில் பராமரிப்பின்றி காணப் படுகிறது.
கர்ப்பகிரகத்தின் முகப்பு பகுதி கூரை இல்லாமல் உள்ளது சுற்றுபுற சுவர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
அவற்றை மீட்டு இக்கோயிலை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாஞ்சூர் மகாலிங்கம் கூறுகையில், இக்கோயில் பல ஆண்டு களுக்கு முன்பு மண்ணால் மூடபட்டிருந்தது.
இதை பார்த்த கிராம மக்கள் மண்ணை அகற்றி சிலையை கண்டுபிடித்தோம். கோயில் பண்டைய கால செங்கற்களால் கட்ட பட்டுள்ளது.
பாண்டிய மன்னர்களால் கட்டபட்டதாக தெரிகிறது. அதற்கான கல்வெட்டு கோயில் முன்பு கிடக்கும் கல்துாண்களில் எழுதபட்டுள்ளது. சுவர்கள் எப்போது வேண்டு மென்றாலும் விழக் கூடிய அபாயத்தில் உள்ளது என்றார்.
அண்ணாத்துரை கூறுகையில், இக்கோயில் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் அமைப்பு போல் கட்டபட்டுள்ளது.
கிழக்கு பார்த்து சிவனும், தெற்கு பார்த்து அம்மன் இருக்கும் வகையில் கட்டபட்டுள்ளது. அம்மன் சிலையை திருடர்கள் திருடிச் சென்றுவிட்டனர். தினமும் நான் சென்று நித்ய பூஜை செய்கிறேன். பராமரிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தாலும் எவ்வித பலனும் இல்லை.
பழமையை இழக் காமல் புனரமைத்து பாதுகாக்க இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருவாடானை தாலுகாவில் இது போல் பல்வேறு கிராமங்களில் கோயில்கள் சிதிலமடைந் துள்ளன. அக் கோயில்களை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.