/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 11, 2025 11:30 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜேஷ், பொருளாளர் அரிகரசுதன் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆந்திர மாநிலத்தில் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.6000 முதல் ரூ.15ஆயிரம் வரை மாதாந்திர உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உதவித்தொகையை உயர்த்தக் கோரி போராட்டங்கள் நடத்தியும் வழங்க அரசு மறுக்கிறது. வருவாய்த்துறை மூலம் ரூ.1500, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ரூ.2000 வழங்கி வருவது இன்றைய விலைவாசிக்கு போதுமானது இல்லை.
எனவே ஆந்திர மாநிலம் போன்று மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சங்க மாவட்ட, தாலுகா நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.