/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவ முகாமில் வசதியின்றி மாற்றுத் திறனாளிகள் அவதி
/
மருத்துவ முகாமில் வசதியின்றி மாற்றுத் திறனாளிகள் அவதி
மருத்துவ முகாமில் வசதியின்றி மாற்றுத் திறனாளிகள் அவதி
மருத்துவ முகாமில் வசதியின்றி மாற்றுத் திறனாளிகள் அவதி
ADDED : டிச 27, 2025 05:32 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த அடையாள அட்டை வழங்கும் மருத்துவ அளவீட்டு முகாமில் வசதிகளின்றி மாற்றுத் திறனாளிகள் சிரமப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்து அளவீட்டு முகாம் நடந்தது.
இதில் ராமநாதபுரம், போகலுார் ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளின்றி சிரமப்பட்டனர். போகலுாரை சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், மருத்துவ முகாமில் குடிநீர், அமர இருக்கை வசதி செய்து தரவில்லை.
சிறிய அறையில் மொத்தமாக அனைவரையும் வரச்சொல்லி அலை கழித்து விட்டனர். பலர் திரும்பி சென்று விட்டனர். பெயருக்கு முகாம் நடத்துகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்களில் உரிய வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

