/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
3 மாதங்களாக குடிநீரின்றி தவிக்கும் நாகநாத சமுத்திரம் கிராம மக்கள் குறைகளை கேளுங்க ஆபீசர்

ADDED : டிச 27, 2025 05:32 AM
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட நாகநாத சமுத்திரத்தில் கடந்த மூன்று மாதங்களாக கிராம பைப்புகளில் குடிநீர் சப்ளையில்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர். நாகநாத சமுத்திரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள மேல்நிலைத் தொட்டி மூலமாக கிராமத்தில் உள்ள தெருக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும். தற்போது குடிநீர் வசதியின்றி உள்ளதால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். நாகநாத சமுத்திரம் கிராம மக்கள் கூறியதாவது:
வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் பெரிய பட்டினம் பகுதியில் இருந்து கிணற்றிலிருந்து தண்ணீர் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டு அங்கிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும்.
தற்போது மூன்று மாதங்களாக தண்ணீர் சப்ளை இன்றி காட்சி பொருளாக உள்ளது.
பெரியபட்டினம், முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவு நீரை இங்குள்ள நீர்நிலைகளில் திறந்து விடும் போக்கு அதிகரிக்கிறது. இதனால் அப்பகுதி நீர்நிலை மாசடைகிறது.
துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது.
கோழி கழிவுகளை சாலையோரம் கொட்டிச் செல்லும் போக்கு தொடர்கிறது.
எனவே திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் எங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.