/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத்திறனாளிகள் செயற்குழு கூட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் செயற்குழு கூட்டம்
ADDED : டிச 26, 2025 05:20 AM
ஆர்.எஸ்.மங்கலம்: மாற்றுத்திறனாளிகள் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் சதீஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் புவனா முன்னிலை வகித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தமிழக அரசின் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தாத நிலை உள்ளது. அதனால் இத்திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்த நடவடிக்கை தேவை. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உண்மையான மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் கிடைப்பதில்லை. மேலும் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டப் பணிகளை பேரூராட்சி பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

