ADDED : நவ 26, 2024 05:02 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீ தடுப்பு, பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடந்தது.
டீன் அமுதாராணி தலைமை வகித்தார். தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் கோமதி அமுதா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் டாக்டர்கள், நர்ஸ்கள், நோயாளிகளை எப்படி பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். தீ விபத்து குறித்து எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் உடலில் தீப்பற்றாமல் தப்பிப்பது எப்படி, தீ விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சுவாசப்பிரச்னை ஏற்படாமல் எப்படி தீயை அணைப்பது.
காஸ் சிலிண்டர்களில் தீப்பற்றினால் எப்படி அணைப்பது உட்பட பல்வேறு செயல்முறை விளக்கங்களை செய்து காட்டினர். இதில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள் பங்கேற்றனர்.

