தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காட்சிப்பொருளான மினி டிரான்ஸ்பார்மர்

காட்சிப்பொருளான மினி டிரான்ஸ்பார்மர்

காட்சிப்பொருளான மினி டிரான்ஸ்பார்மர்


UPDATED : நவ 25, 2026 04:10 PM

ADDED : நவ 25, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 04:10 PM ADDED : நவ 25, 2026 04:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி பாண்டியன் நகரில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

இங்கு அதிகளவில் மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் கூடுதல் திறன் கொண்ட மினி டிரான்ஸ்பார்மர் நிறுவ கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மினி டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது வரை அமைக்காமல் காட்சி பொருளாக வைத்துள்ளனர்.

ரெகுநாதபுரத்தை சேர்ந்த பா.ஜ., ஒன்றியத் தலைவர் முனியசாமி கூறியதாவது:

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரெகுநாதபுரம் ஊராட்சி பாண்டியன் நகரில் மினி டிரான்ஸ்பார்மர் வைப்பதற்கான மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றின் இதுவரை பொருத்தாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது குறித்து மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us