sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

151 மையங்களில் வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்

/

151 மையங்களில் வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்

151 மையங்களில் வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்

151 மையங்களில் வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்


ADDED : அக் 30, 2025 03:47 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் துவங்கியுள்ளது. நவ.,1 வரை நடக்கும் இம்முகாமில் ஆறு மாதம் முதல் 5 வயதுள்ள குழந்தை களுக்கு வழங்கப்படும்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:

சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, தீவிர சுவாச தொற்று நோயால் மூன்று முதல் 5 வயது குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படு கின்றனர்.

இதை தடுக்கும் வகையில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

திருவாடானை தாலுகாவில் 126 அங்கன்வாடி மையங்கள், ஆறு ஆரம்ப சுகாதார நிலையம், 25 துணை சுகாதார நிலையங்கள் என 151 முகாம்களில் நவ.,1 வரை நடைபெறும்.

இதன்படி 6 முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி., 12 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தை களுக்கு 2 மி.லி., அளவும் வழங்கப்படும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கி அவர்களின் உடல் நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us