/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
/
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 27, 2025 06:27 AM

ராமநாதபுரம்: பள்ளிக் கல்வித் துறையின் வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தனியார் கல்வியியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கண்காட்சியை துவக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித்திட்ட அலுவலர் கணேச பாண்டியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், ராமநாதபுரம் மாவட்டக் தொடக்க கல்வி அலுவலர் (பொ) ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இங்கு 11 பிளாக்குகளில் முதல் மூன்று இடங்களில் வென்ற 99 மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றன. இதில் முதலிடம் பெறும் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாவட்டச் சூழல் ஒருங்கிணைப் பாளர் விஜயகுமார், வானவில் மன்ற நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

