/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்
/
மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்
ADDED : ஆக 30, 2025 03:43 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை -2025 விளையாட்டு போட்டிகள் ஆக., 25 முதல் செப்.,12 வரை நடக்கிறது.
இதன்படி ராமநாத புரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கான கேரம் போட்டிகள் நடந்தது. இதே போல கலெக்டர் அலுவலக வளாகம் முகமது தஸ்தகீர் மெ.மே. நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது.
ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.