/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை, தொண்டியில் தீபாவளி கொண்டாட்டம்
/
திருவாடானை, தொண்டியில் தீபாவளி கொண்டாட்டம்
ADDED : அக் 21, 2025 03:28 AM

திருவாடானை: தீபாவளியை முன்னிட்டு திருவாடானை, தொண்டி பகுதி மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். வீடுகளில் இறைச்சி எடுத்து சமைத்து வழிபட்டு உண்பது வழக்கம் என்பதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இனிப்பு கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்ட நிலையில் அங்கும் மக்கள் இனிப்புகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி உந்திபூத்த பெருமாள் மற்றும் கிராமக் கோயில்களில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களுடன் அலுவலர்கள் தீபாவளியை கொண்டாடினர். பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு, செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.