/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை கண்டித்து தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ADDED : நவ 11, 2025 11:30 PM

ராமநாதபுரம்: தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., சார்பில் அதன் கூட்டணிகட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனுடன் இணைந்து மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு ஓட்டு திருட்டில் ஈடுபடுகிறது. எனவே எஸ்.ஐ.ஆர்., ஐ உடன் நிறுத்த வேண்டும். 2002 ல் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒரு சில பூத்களை தவிர பெரும்பாலானவை ஆன்-லைனில் பதிவு செய்யப்படாமல் உள்ளது. இதனால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய சிரமப்படுகின்றனர்.
இதுபோன்ற காரணங்களால் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்களை நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு 5 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தேவையற்றது என தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் எஸ்.ஐ.ஆர்., ஐ கண்டித்து பேசினர். தி.மு.க., காங்., வி.சி.க., ம.தி.மு.க., இரு கம்யூ.,க்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானார் பங்கேற்றனர்.
போக்குவரத்து பாதிப்பு ராமேஸ்வரம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கட்சியினர் வாகனங்களை ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து நிறுத்தினர். ராமநாதபுரத்தில் இருந்து வந்த வாகனங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றி சென்று பட்டணம்காத்தான் பழைய செக்போஸ்ட் ரோடு வழியாக சென்றன.
ராமேஸ்வரத்தில் இருந்து வந்த வாகனங்கள் ராமநாதபுரம் செல்ல முடியாமல் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.