/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வார்டில் சாக்கடை பிரச்னை தி.மு.க., கவுன்சிலர் மறியல்
/
வார்டில் சாக்கடை பிரச்னை தி.மு.க., கவுன்சிலர் மறியல்
வார்டில் சாக்கடை பிரச்னை தி.மு.க., கவுன்சிலர் மறியல்
வார்டில் சாக்கடை பிரச்னை தி.மு.க., கவுன்சிலர் மறியல்
ADDED : நவ 21, 2025 05:04 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் தனது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணாத அதிகாரிகளை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் மக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த கார்மேகம் இருக்கிறார். இங்குள்ள 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நாகராஜன் பொதுமக்களுடன் நேற்று மாலையில் அவரது வார்டிற்கு உட்பட்ட மதுரையார் தெருவில் பாதாள சாக்கடை 24 மணி நேரமும் தெருவில் ஓடுகிறது. புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக கூறி சிறிது நேரம் மக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
கவுன்சிலர் நாகராஜன் கூறுகையில், பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. 12 நாட்களாக கழிவுநீர் ஓடுகிறது என ஓட்டளித்த மக்கள் வீட்டிற்கு வந்து கேள்வி கேட்கின்றனர். சரியான முறையில் வேலை பார்ப்பது இல்லை. எனது 9 வது வார்டை புறக்கணிக்கின்றனர். கவுன்சிலராக இருந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளது வேதனையாக உள்ளது என்றார்.

