/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : நவ 15, 2024 06:41 AM

ராமநாதபுரம்: சென்னையில் அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு டாக்டர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் மலையரசு தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர்கள் சின்னத்துரை அப்துல்லா, கலீல்ரகுமான் முன்னிலை வகித்தனர். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பாததால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் அரவிந்த்ராஜ், மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் மாலை முதல் டாக்டர்கள் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.