/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்கள் பிடிப்பு
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்கள் பிடிப்பு
ADDED : டிச 05, 2025 06:26 AM
தினமலர் செய்தி எதிரொலி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கோழியார்கோட்டை, பூவாணிப் பேட்டை, டி.டி. மெயின் ரோடு, புல்லமடை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி உத்தரவின் பேரில் பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிந்த நாய்களை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்து காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். நாய்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
அதே நேரத்தில் மீண்டும் நாய்கள் ஊருக்குள் வராதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

