/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவில் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
/
மாவட்ட அளவில் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
மாவட்ட அளவில் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
மாவட்ட அளவில் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : டிச 05, 2025 06:27 AM

ராமநாதபுரம்: பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூட்ட அரங்கில் மாவட்ட வானவில் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அளவில் வானவில் மன்ற போட்டிகள் நடந்தது. ஒன்றிய அளவில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் படைப்பு கண்காட்சி போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூட்ட அரங்கில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி சான்றிதழ், கேடயங்களை வழங்கி வாழ்த்தினார். திருப்புல்லாணி ஒன்றியம் மேலபுதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ரஹிமா பேகம், அல்ரிஷா, திலீபன் முதல் பரிசும், கடலாடி ஒன்றியம் மேலக்கிடாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உமேஷ்னா, கார்த்திக் ராஜா, லெட்சுமணன் 2ம் பரிசும், மண்டபம் ஒன்றியம் குயவன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சந்தோஷ்குமார், ரோஹித், யோகிராம் 3ம் பரிசும் பெற்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் கணேச பாண்டியன், முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் (உயர்நிலை பள்ளி) ஆரோக்கிய தாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகர், நாகராஜ், ரமேஷ் பங்கேற்றனர்.

