/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கதவு இல்லாமல் செல்லும் டவுன் பஸ்களில் விபத்து அபாயம்
/
கதவு இல்லாமல் செல்லும் டவுன் பஸ்களில் விபத்து அபாயம்
கதவு இல்லாமல் செல்லும் டவுன் பஸ்களில் விபத்து அபாயம்
கதவு இல்லாமல் செல்லும் டவுன் பஸ்களில் விபத்து அபாயம்
ADDED : ஆக 30, 2025 03:45 AM

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் இயங்கும் நான்கு டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தாததால் பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறியதாகியுள்ளது. அரசு உத்தரவுப்படி படியில் யாரும் தொங்கியபடி பயணம் செய்யாமல் இருக்கவும், ஓடும் பஸ்களில் பயணியர் அவசரகதியில் ஏறுவதால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கவும் அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. திருவாடானையை மையமாக வைத்து 12 டவுன் பஸ்கள் இயங்குகின்றன. இதில் எட்டு பஸ்களுக்கு தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளது.
திருவெற்றியூர், வட்டாணம், தோமாயபுரம், ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தவில்லை. இதனால் பயணியர் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. சில பஸ்களில் கதவுகள் சரியாக மூடப் படாமலும், பழுதடைந்த நிலையில் இருப்பதாலும் பயணியருக்கு பாது காப்பில்லாத நிலை ஏற் பட்டுள்ளது.
நீண்ட துாரம் செல்லும் சில பஸ்களில் கதவுகளின் கைப்பிடியை பிடித்து ஏறி இறங்கும் போது கதவு நகர்வதால் பயணிகள் தடுமாறுகின்றனர். தானியங்கி கதவுகள் இல்லாமல் செல்லும் டவுன் பஸ்களில் கதவுகள் அமைக்க போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.