/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரட்டை வேடம் தி.மு.க.,விற்கு கைவந்த கலை: தினகரன் பேட்டி
/
இரட்டை வேடம் தி.மு.க.,விற்கு கைவந்த கலை: தினகரன் பேட்டி
இரட்டை வேடம் தி.மு.க.,விற்கு கைவந்த கலை: தினகரன் பேட்டி
இரட்டை வேடம் தி.மு.க.,விற்கு கைவந்த கலை: தினகரன் பேட்டி
ADDED : மே 18, 2025 10:52 PM
முதுகுளத்துார் : ''தி.மு.க.,வுக்கு இரட்டை வேடம் என்பது கைவந்தகலை'' என ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறினார்.
அவர் கூறியதாவது:
டாஸ்மாக் முறைகேடு விசாரணையை முதல்வர் ஸ்டாலின் தடுக்க நினைக்காமல் விசாரணைக்கு பதில் சொல்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நீதிமன்றங்களில் தமிழக அரசு தடை கேட்க கூடாது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தடையாய் இருக்கிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
ஆனால் தி.மு.க., கூட்டணி கட்சி ஆளும் கேரளாவில் முதல்வருடன் கைகோர்த்துக் கொண்டு மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். எனவே இரட்டை வேடம் என்பது தி.மு.க.,விற்கு கைவந்த கலை. தி.மு.க.,வில் முதல்வர் குடும்பத்திற்கு மட்டும் தான் எல்ேலாருக்கும் எல்லாமே தவிர, தமிழக மக்களுக்கு கிடையாது.
சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றாத இந்த ஆட்சி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது. இதுவரை இப்படி மோசமான ஆட்சி நடந்ததில்லை என்றுதான் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தல் நல்ல முடிவை தரும் என்றார்.