ராமநாதபுரம் மாவட்ட ரயில் தேவைக்காக ராமேஸ்வரம் பிராந்திய ரயில் பயனாளர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் கார்த்திக் செல்வா தலைமையில் நடந்தது.
செயலாளர் சகாய வினோத், பொருளாளர் சிவபிரகாஷ், ஆலோசகர் ஹாஜி இஸ்மாயில் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தற்போது வாரம் ஒரு முறை இயக்கப்படும் கோவை விரைவு ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். பகல் நேரத்தில் வந்தே பாரத், மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.
ரயில் நிலைய தரவரிசை பட்டியலில் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் தரம் உயர்ந்துள்ளது.
மூன்றாண்டுகளாக சிறப்பு ரயிலாக இயக்கப்படும் ஹூப்ளி ரயிலை தினசரி இயக்க வேண்டும்.
அயோத்தியா, சேது அதி விரைவு ரயில், பெரோஸ்பூர்- - ராமேஸ்வரம், ஹம்சாபர் விரைவு ரயில்களை பரமக்குடி மற்றும் மண்டபம் பகுதியில் நிறுத்த வேண்டும்.
ரயில்வே நிர்வாகத்தினரால் அறிவிப்போடு நின்றுபோன கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
ராமேஸ்வரம் பகுதிக்கு அதிக ரயில்கள் இயக்கும் வகையில் மதுரை- -ராமேஸ்வரம் ரயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.
அனைத்து தாலுகாக்களுக்கும் ரயில் வசதி என்ற அடிப்படையில் கமுதி பகுதிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும். தனுஷ்கோடி பகுதிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும். போர்ட் மெயில் அல்லது புதிதாக இயக்கப்படும் ராமேஸ்வரம்- தாம்பரம் ரயிலை உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நிறுத்தம் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை ரயில்வே நிர்வாகத்திற்கு உரிய அழுத்தம் கொடுத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

