UPDATED : அக் 09, 2026 06:38 PM
ADDED : அக் 09, 2026 06:36 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் டாக்டர் இ.எம்.அப்துல்லா நுாற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தை சேர்ந்த டாக்டர் இ.எம்.அப்துல்லா தனது தாயார் பெயரில் செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், பொறியியல், கலை அறிவியல், நர்சிங் கல்லூரிகளை துவக்கி வைத்தார். அவரது நுாற்றாண்டு விழா ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் செய்யதா அப்துல்லா, டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தனர். செல்லத்துரை அப்துல்லா வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சாலிகு, நடிகர் செந்தில், ராமநாதபுரம் கனகமணி மருத்துவமனை இதயநோய் நிபுணர் டாக்டர் அரவிந்தராஜ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. காங்., மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன், தலைமை ஆசிரியர் முத்துசாமி, டாக்டர் அஜ்மல்கான், அரசு செவிலியர் கல்லுாரி முன்னாள் முதல்வர் சீதாலட்சுமி உட்பட கல்வி மருத்துவத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகராட்சி தலைவர் கார்மேகம் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. டாக்டர் இ.எம்.அப்துல்லா நுாற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர்கள் சுல்தானா பாபு, பாத்திமா சின்னத்துரை, அபிதா தஸ்னீம், ஷிபா பாபு, பரூக் அப்துல்லா, பாத்திமா ஷானாஸ், ராசிகா, அக்கிலா, ஹாரிஸ் அப்துல்லா, இஜாஸ் அப்துல்லா, அட்டிப் அப்துல்லா மற்றும் கல்லுாரி, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.–––
