/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.40 லட்சத்தில் ராமேஸ்வரம் தேசிய சாலையில் குடிநீர் குழாய்
/
ரூ.40 லட்சத்தில் ராமேஸ்வரம் தேசிய சாலையில் குடிநீர் குழாய்
ரூ.40 லட்சத்தில் ராமேஸ்வரம் தேசிய சாலையில் குடிநீர் குழாய்
ரூ.40 லட்சத்தில் ராமேஸ்வரம் தேசிய சாலையில் குடிநீர் குழாய்
ADDED : மார் 06, 2024 04:47 AM

ராமேஸ்வரம், : -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நகராட்சி நிர்வாகம் ரூ. 40 லட்சத்தில் குடிநீர் குழாய் பதித்துள்ளனர். இது பாதுகாப்பாக இருக்குமா என மக்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தில் ராமர் தீர்த்தம், பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட சில தெருக்களில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட விரிசலில், கழிவுநீர் கலந்ததாக மக்கள் புகார் செய்தனர். இதனால் மாற்று குழாயில் குடிநீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் சாலை ஓரத்தில் குழாய் பதித்து மக்களுக்கு குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி ரூ.40 லட்சத்தில் ராமநாதசுவாமி நகரில் இருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வெட்டவெளியில் குழாய் பதித்து ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இப்பணி இறுதி கட்டத்தில் உள்ளதால் ஓரிரு வாரங்களில் முழுமை பெறும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
உடையும் அபாயம்
இந்த குழாய் மீது குறுகிய அகலம் கொண்ட திட்டக்குடி சாலையில் கனரக வாகனங்கள் ஏறிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் பெருக்கெடுக்கும் அவலம் உள்ளது.
இதன் மூலம் மீண்டும் மக்களுக்கு குடிநீர் சப்பளை செய்ய முடியாத நிலையும், அரசு நிதி ரூ.40 லட்சம் வீணாகும் அபாயம் உள்ளது.
எனவே சாலையோரத்தில் உள்ள இக்குழாயை பாதுகாப்பான முறையில் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

