/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மடத்தாகுளத்தில் குடிநீர் தட்டுப்பாடு
/
மடத்தாகுளத்தில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : அக் 29, 2025 07:54 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்தாக்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.
மடத்தாகுளத்தில் 1200க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் மூன்று உள்ளன. இந்நிலையில் தெருக்களில் விநியோகம் செய்யக்கூடிய குழாய்களில் தண்ணீர் வரத்து என்பது காட்சி பொருளாக இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
மாரியூர் ஊராட்சியில் மன்னார் வளைகுடா கடற்கரை அருகே உள்ள பகுதிகளில் ஏராளமான குடிநீர் கிணறுகள் உள்ளன. அவற்றிலிருந்து டிராக்டர் மற்றும் டேங்கர்களில் இருந்து தண்ணீர் சேகரித்து பிற பகுதிகளில் விற்கப்படுகிறது. மடத்தாகுளத்திற்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்யாத நிலை தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
மடத்தாகுளம் விவசாயி குணாளன் கூறியதாவது:
மடத்தாகுளத்தில் உள்ள குழாய்களில் தண்ணீர் வினியோகம் முறையாக செயல்படுவதில்லை. குடம் தண்ணீர் ரூ.5, ஆர்.ஓ., தண்ணீர் ரூ.10ம் விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம்.வருமானத்தின் ஒரு பகுதி குடிநீருக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது. மாரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை பகுதியை ஒட்டி குடிநீர் கிணறுகளில் இருந்து தண்ணீர் சேகரித்து விற்பனைக்காக வழங்கி வரும் நிலையில், தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

