நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே மண்டலக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரஞ்சித்குமார் 38. முதல் மனைவி இறந்து விட்டார். இரண்டாவது மனைவி பிரேமாவுடன் வசித்தார். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் பிரேமா ஓரியூரில் தனியாக வசித்தார். அங்கு சென்ற ரஞ்சித்குமார் சேர்ந்து வாழுமாறு மனைவியை வற்புறுத்தினார். இதற்கு பிரேமா மறுத்தார்.
இதனால் கவலையடைந்த ரஞ்சித்குமார் டிச.19 ல் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு நேற்று காலை ரஞ்சித்குமார் இறந்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

