/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
/
ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
ADDED : நவ 18, 2025 07:22 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பஸ்சில் போதை பொருள் கடத்துவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ், கண்காணிப்பாளர் பாபுராஜ், போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அறந்தாங்கியிலிருந்து தொண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சை, பாசிபட்டினம் அருகே மறித்து சோதனை செய்தனர். பஸ்சின் பின்புறம் உள்ள இருக்கைக்கு அடியில் பாலிதீன் பைகள் இருந்தன. அவற்றை போலீசார் சோதனை செய்தபோது, மெத் ஆம் பெட்டாமைன் என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
சுங்கத்துறையினர் கூறுகையில், 'ஒன்றரை கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பயணியரிடம் விசாரணை செய்ததில் தகவல் கிடைக்கவில்லை.
'இந்த போதை பொருள் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டு, தொண்டியிலிருந்து இலங்கைக்கு கடத்த கொண்டு வந்திருக்கலாம். இதன் மதிப்பு, 4.50 கோடி ரூபாய். கடத்தல்காரர்களை தேடி வருகிறோம்' என்றனர்.

