/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டி.எஸ்.பி., பணியிடம் நிரப்பக் கோரிக்கை
/
டி.எஸ்.பி., பணியிடம் நிரப்பக் கோரிக்கை
ADDED : பிப் 18, 2025 04:52 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் காலியாக உள்ள டி.எஸ்.பி., பணியிடத்தை நிரப்ப வேண்டும் என வர்த்தக சங்கத்தினர், மக்கள் வலியுறுத்தினர்.
முதுகுளத்துார் டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் பேரையூர், கீழத்துாவல், தேரிருவேலி, கடலாடி, இளஞ்செம்பூர், கீழச்செல்வனுார், முதுகுளத்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் என 8 போலீஸ் ஸ்டேஷன் உள்ளன. இங்கு ஜன.,31ல் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த சின்னக்கண்ணு பணி நிறைவு பெற்றார்.
இதையடுத்து இதுவரை புதிய டி.எஸ்.பி., நியமிக்கப்படவில்லை, கூடுதலாக பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் பணிபுரிகிறார்.
இந்நிலையில் முதுகுளத்துார் டி.எஸ்.பி., இல்லாத நிலையில் சிறு பிரச்னை என்றால் கூட சட்டசபை தொகுதியின் தலைநகரமாக இருக்கும் முதுகுளத்துாரில் கும்பலாக கூடுவது சாலை மறியலில் ஈடுபடுவது என பதட்டமான நிலை ஏற்படுவது வழக்கம்.
எனவே முதுகுளத்துார் மக்களின் நலன் கருதி காலியாக உள்ள முதுகுளத்துார் டி.எஸ்.பி., பணியிடத்தை நிரப்ப வேண்டும் என வர்த்தக சங்கத்தினர், மக்கள் வலியுறுத்தினர்.

