/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரட்டை பதிவு வாக்காளர்கள்கண்டறியும் பணிகள் தீவிரம்
/
இரட்டை பதிவு வாக்காளர்கள்கண்டறியும் பணிகள் தீவிரம்
இரட்டை பதிவு வாக்காளர்கள்கண்டறியும் பணிகள் தீவிரம்
இரட்டை பதிவு வாக்காளர்கள்கண்டறியும் பணிகள் தீவிரம்
ADDED : நவ 05, 2024 04:57 AM
திருவாடானை: திருவாடானை தொகுதியில் இரட்டை பதிவு வாக்காளரை கண்டறிந்து நீக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுஉள்ளனர். புதிய வாக்காளர் சேர்க்க நான்கு நாட்கள் முகாம்கள் நடைபெறவுள்ளது.
திருவாடானை சட்டசபை தொகுதியில் 247 ஓட்டுசாவடிகள் உள்ளன. இத் தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டு, அதில் திருத்தம் செய்ய 4 நாட்கள் முகாம்கள் நடக்கிறது.
இது குறித்து தேர்தல்அலுவலர்கள் கூறியதாவது:
சுருக்கமுறை திருத்தத்தில்18 வயதான இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் இறந்தவர் பெயர், இரட்டை பதிவு வாக்காளரை நீக்குவதும் அவசியமாகிறது.
ஆகவே திருவாடானை சட்டசபை தொகுதியில் அதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நவ., 9,10, 23, 24 நாட்களில் நடக்கிறது.
இம்முகாம்களில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல்,நீக்கல், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை செய்யலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஆன்-லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர்கள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் என்றனர்.