/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடர் மழையால் வண்ணாங்குண்டில் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் பயிர்கள் திருப்பி விடப்படும் வாறுகால் நீர்

ADDED : நவ 25, 2024 06:38 AM

பெரியபட்டினம்: தொடர் மழையின் காரணமாக 20 ஆண்டுகளுக்கு பிறகு வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் நெற்பயிரில் தேங்கியுள்ளதால், அவை அழும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நவ.,19, 20,21,அதிகளவு தொடர் மழை பெய்தது. இதனால் வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை ஊருணி குளம் உள்ளிட்டவைகளில் நீர் நிரம்பி அருகே உள்ள விளைநிலங்கள் முழுவதும் தண்ணீரால் மூழ்கியது. வீடுகளை சுற்றிலும் தண்ணீர் உள்ளது. அவற்றை கடத்துவதற்கு வண்ணாகுண்டு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
வண்ணாங்குண்டு சிலாவத்துறை பகுதி மற்றும் சுற்றுவட்டார நீர்நிலையில் இருந்து நிரம்பிய வெள்ளம் அப்பகுதி சாலையை மூழ்கடித்ததால் மண் அள்ளும் இயந்திரம் மூலம் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டு மாடு விழுந்தான் ஊருணி வழியாக மானங்குடி தரவைக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது.
வண்ணாங்குண்டு ஊராட்சி தலைவர் தியாகராஜன் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது பெய்த மழை அதிகளவு நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் சூழ்ந்துள்ளது. எனவே இவற்றை கடத்துவதற்காக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பணிகள் நடக்கிறது.
வண்ணாங்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.