/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவாகுளத்தில் தயாராகும் பதநீர் சேகரிக்கும் மண்பானை கலயங்கள்
/
காவாகுளத்தில் தயாராகும் பதநீர் சேகரிக்கும் மண்பானை கலயங்கள்
காவாகுளத்தில் தயாராகும் பதநீர் சேகரிக்கும் மண்பானை கலயங்கள்
காவாகுளத்தில் தயாராகும் பதநீர் சேகரிக்கும் மண்பானை கலயங்கள்
ADDED : ஜூலை 12, 2025 11:39 PM
சிக்கல்,: சிக்கல் அருகே காவாகுளம் கிராமத்தில் பதநீர் சேகரிப்பிற்கான மண்பானை கலயம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
சிக்கல் அருகே சுற்றுவட்டார கிராமங்களான மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், பூப்பாண்டியபுரம், கடுகுச்சந்தை உள்ளிட்ட பெருவாரியான பகுதிகளில் அதிகளவு பனை மரங்கள் உள்ளன.
பனைத் தொழிலுக்கு பெருவாரியாக பயன்படக்கூடிய மண் கலயங்களை பனை மரத் தொழிலாளர்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
ஏழு முதல் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண்பானை கலயங்களை முறையாக பனை மரத்தில் கட்டி வைத்து சுண்ணாம்பு பூச்சு வைத்து அவற்றில் உள்ள பாளையின் வழியாக பதநீர் சேகரிக்கப்படுகிறது. மண்பானை தொழிலாளர்கள் கூறியதாவது:
இதற்கென பிரத்தியேகமாக கிடைக்கக்கூடிய மண்ணை ஊற வைத்து நன்கு பிசைந்து மண்பானை தயாரிக்கிறோம்.
முன்பு கைகளால் வட்ட வடிவமான சக்கரங்களை கம்பு கொண்டு சுற்றி பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருள்களை தயாரித்தோம்.
தற்போது நவீன தொழில்நுட்பத்தில் மோட்டார் இயந்திரம் மூலமாக சுழல கூடிய சக்கரத்தில் உள்ள பலகையில் வைத்து தேவைக்கேற்ப மண் பானைகளை விரைவாகவும் எளிமையாகவும் செய்ய முடிகிறது.
பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மண்பாண்ட பொருள்கள் பல வடிவங்களில் பொதுமக்களுக்கு பயன்படுகிறது.
உலர வைக்கப்பட்ட மண் பானை கலயங்களை மண்பாண்ட பொருட்களை தயாரிப்பிற்கான சூளையில் வைத்து எடுத்து அவற்றை உரிய முறையில் பாதுகாத்து விற்பனை செய்கிறோம் என்றனர்.