/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலையை புதுப்பிக்கும் பணி துவக்கம் : வாகன ஓட்டிகள் நிம்மதி

ADDED : பிப் 02, 2025 04:07 AM
தொண்டி: கிழக்கு கடற்கரை சாலையை புதுப்பிக்கும் பணிகள் துவங்கியதால் வாகன ஓட்டிகள் நிம்மதிஅடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையானது கன்னிராஜபுரம், சாயல்குடி, ஏர்வாாடி, கீழக்கரை, திருப்புல்லாணி, ராமநாதபுரம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், நம்புதாளை, தொண்டி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் வழியாக செல்கிறது. கன்னியாகுமரி-சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
தினமும் இந்த ரோட்டில்பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. ராமநாதபுரத்திலிருந்து எஸ்.பி.பட்டினம் வரை பல்வேறு பகுதிகளில் ரோட்டின் நடுவில் அதிகளவில் பள்ளங்கள் உள்ளது. இதனால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிர் பலி அதிகரித்தது.
இதையடுத்து ரோட்டை புதுப்பிக்கும் பணிகள் துவங்கியதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து அலுவலர்கள் கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலையை உயர்த்தி அமைக்க நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் சாலையின் இரு பக்கமும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து முடிந்தது. நேற்று முதல் சாயல்குடி அருகே கீழச்செல்வனுாரில் இருந்து சாலையை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து எஸ்.பி.பட்டினம் வரை சாலையை உயர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெறும் என்றனர்.