/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை பள்ளியில் மரக்கன்றுகள் நட கல்வித்துறை அறிவுறுத்தல்
/
நாளை பள்ளியில் மரக்கன்றுகள் நட கல்வித்துறை அறிவுறுத்தல்
நாளை பள்ளியில் மரக்கன்றுகள் நட கல்வித்துறை அறிவுறுத்தல்
நாளை பள்ளியில் மரக்கன்றுகள் நட கல்வித்துறை அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 04, 2025 12:51 AM
ராமநாதபுரம்: நாளை (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளி வளாகங்களிலும் குறைந்தது 5 மரக்கன்றுகள் வேலி பாதுகாப்புடன் நட வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் 2025-26 ல் ஜூன் 5ல் பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட வலியுறுத்தியுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் சுற்றுச்சூழல் தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதன்படி பள்ளி வளாகத்தில் குறைந்தது 5 மரக்கன்றுகள் நட வேண்டும். கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளும் நடத்த வேண்டும். அதற்கான புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை பள்ளியின் தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஜூன் 20க்குள் ஒப்படைக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.