/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர்களுக்கு இலவச சீருடை அளவு எடுக்கும் பணிகள் தீவிரம்
/
மாணவர்களுக்கு இலவச சீருடை அளவு எடுக்கும் பணிகள் தீவிரம்
மாணவர்களுக்கு இலவச சீருடை அளவு எடுக்கும் பணிகள் தீவிரம்
மாணவர்களுக்கு இலவச சீருடை அளவு எடுக்கும் பணிகள் தீவிரம்
ADDED : டிச 11, 2024 05:36 AM

திருவாடானை : பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க அளவு எடுக்கும் பணிகள் நடக்கிறது.
தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் சமூகநலத்துறையின் கீழ் செயல்படுகிறது. இத்திட்டம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நான்கு செட்டுகளாக வழங்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இந்த சீருடை அளவுகளை உத்தேசமாக கணித்து மொத்தமாக வழங்கப்பட்டது. அதில் அளவு வித்தியாசம் அதிகமாகவும், குறைவாகவும் இருந்ததால் மாணவர்கள் அணிந்து செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக அளவு எடுத்து சீருடைகள் தைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி திருவாடானை வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அளவு எடுக்கும் பணிகள் நடக்கிறது.
சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் விலையில்லா சீருடைகள் நான்கு செட்டுகளாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் உடலுக்கு ஏற்ப சீருடை அணியும் வகையில் அளவு எடுக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகள் முடிந்தவுடன் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு தைக்கும் பணிகள் நடைபெறும். அந்த பணிகள் முடிந்தவுடன் 2025ம் ஆண்டு மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்றனர்.

