நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே நகரிகாத்தான் அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் மரியராஜ் 67. கூலி வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு ஓரியூர் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த டூவீலர் மோதியதில் மரியராஜ் அதே இடத்தில் பலியானார்.
தொண்டி போலீசார் டூவீலர் ஓட்டிச் சென்ற நத்தக்கோட்டை முத்துராமலிங்கத்தை 50, தேடி வருகின்றனர்.

