ADDED : டிச 20, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வட்ட கிளை மாநாடு நடந்தது. மாநில துணைத்தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சோமசுந்தர் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் வரவேற்றார்.
புதிய நிர்வாகிகளாக வட்ட தலைவர் கார்த்திபராஜ், துணைத்தலைவர்கள் சத்தியேந்திரன், மதுரைச்சாமி, மருது செயலாளர் தெய்வ மணிகண்டன், இணைச் செயலாளர்கள் கார்த்திக், சக்திவேல், அபிராமி, பொருளாளர் ஆனந்த நாதன், மகளிர் துணைக் குழுக்கள் லெட்சுமி தேவி, ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.