/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
/
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
ADDED : நவ 11, 2024 04:01 AM
சாயல்குடி: சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தி.மு.க., அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், என அரசு ஊழியர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கடலாடி வட்டக் கிளை மாநாடு சாயல்குடியில் நடந்தது. கிளைத் தலைவர் கரிமுல்லாகான் தலைமை வகித்தார். பொருளாளர் தங்கராஜா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கபில் தேவ் மாணிக்கம் வரவேற்றார். வட்ட கிளைச் செயலாளர் சரவணகுமார் வேலை அறிக்கை வாசித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் விஜயராமலிங்கம் மாநாட்டை துவக்கி வைத்தார்.
இதில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட சரண் விடுப்பை வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பி.எட்., முடித்த அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத பதவி உயர்வு விதிகளின்படி பட்டதாரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிகளில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட பணியாளர் முத்துவேல், மாவட்ட துணை தலைவர் பாண்டி, மாவட்ட இணைச்செயலாளர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.