/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் பட்டியல் தயாரித்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
/
வாக்காளர் பட்டியல் தயாரித்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
வாக்காளர் பட்டியல் தயாரித்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
வாக்காளர் பட்டியல் தயாரித்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 20, 2024 06:58 AM
ராமநாதபுரம்,: கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பான ஆலோசனை, ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். கலெக்டர் கூறியதாவது:
இந்திய தேர்தல் கமிஷன் ழிகாட்டுதல் படி ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு 2025 ஜன.1ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். இட நெருக்கடியான ஓட்டுப்பதிவு மையங்கள் மற்றும் சேதமடைந்த மையங்களை கண்டறிந்து மாற்று இடங்கள் தேர்வு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் ஓட்டுச்சாவடி மையங்களின் விபரங்கள் குறித்தும் தெரிவிக்கலாம். பொது மக்களிடமிருந்து படிவம் - 6, 7 மற்றும் 8 ஆகிய விண்ணப்பங்கள் பெற்று அதற்குரிய விசாரணைகளை நேரடியாக கள ஆய்வு செய்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றார்.
பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், தேர்தல் பிரிவு தாசில்தார் முருகேசன், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.