ADDED : மார் 22, 2025 05:45 AM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி ரோட்டில் புதிய மின்கம்பம் மாற்றி அமைத்தனர்.
வெண்ணீர்வாய்க்கால் - வெங்கலக்குறிச்சி ரோட்டில் சென்ற லாரி மின்கம்பியில் உரசி சென்றபோது மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் விவசாய நிலத்தில் இருந்த 8க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தன.
விவசாய நிலத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்ததால் உழவுப் பணியை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். கிருஷ்ணாபுரம், கீழப்பனையேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடைக்காததால் மின் மோட்டார்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதுகுளத்துார் மின்வாரிய பணியாளர்கள் வெங்கலக்குறிச்சி செல்லும் ரோட்டில் விவசாய நிலத்தில் புதிய மின்கம்பங்களை மாற்றி அமைத்தனர்.