/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : நவ 05, 2024 05:00 AM
ராமநாதபுரம்: எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் சங்க சி.ஐ.டி.யு., மாவட்ட அமைப்பு கூட்டம் நடந்தது.
செயலாளர் கஜேந்திரன்தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, ஓய்வு பெற்ற மின் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராமச்சந்திரபாபு, சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் பச்சமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்தால் பணியிடத்திலேயே ரூ.10 லட்சம்இழப்பீடாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகளாக தலைவராக ராமச்சந்திரபாபு, செயலாளராக கஜேந்திரன், பொருளாளராக சுகாதி, துணைத் தலைவர்களாக வேல்முருகன், கார்த்திகேயன், முனியசாமி, துணை செயலாளர்களாக கார்த்திகைராஜன், சண்முகசுந்தரம், மணிமாறன் தேர்வு செய்யப்பட்டனர்.