/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இம்மானுவேல் சேகர-ன் பெயர் சூட்ட கோரிக்கை
/
இம்மானுவேல் சேகர-ன் பெயர் சூட்ட கோரிக்கை
ADDED : ஆக 06, 2025 08:36 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதக்குமார் கூறியதாவது:
சுதந்திரப் போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் பெயரை இதுவரை எந்த ஒரு பஸ்ஸ்டாண்டிற்கும் சூட்டவில்லை. ராமநாதபுரத்தில் 5 லட்சம் பேரும், 3.20 லட்சம் வாக்காளர்களையும் கொண்ட பட்டியல் சமூகம், தலித் கிறிஸ்துவர்களின் ஒற்றை தலைவராக இம்மானுவேல் சேகரனார் உள்ளார்.
அவரை அடையாளப்படுத்தும் வகையில் ராமநாதபுரம் நகராட்சியில் தற்போது கட்டப்பட்டு வரும் பஸ்ஸ்டாண்டிற்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்றார்.