/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்சார கணக்கீடுக்கு அலைபேசி வேண்டும்: ஊழியர்கள் கோரிக்கை
/
மின்சார கணக்கீடுக்கு அலைபேசி வேண்டும்: ஊழியர்கள் கோரிக்கை
மின்சார கணக்கீடுக்கு அலைபேசி வேண்டும்: ஊழியர்கள் கோரிக்கை
மின்சார கணக்கீடுக்கு அலைபேசி வேண்டும்: ஊழியர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 26, 2025 11:32 PM

ராமநாதபுரம்: மின்சார கணக்கீட்டாளர்களுக்கு அலைபேசி வழங்க வேண்டும் என மின் வாரிய ஊழியர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ராமநாதபுரம் திட்ட கிளை 34வது ஆண்டுப் பேரவை கூட்டம் நடந்தது.
திட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மதுரை மண்டல மேலாளர் உமாநாத் துவக்கி வைத்து பேசினார். செயலாளர் காசிநாதன் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஆரோக்கியம் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து மின்சார சட்டதிருத்த மசோதா 2022ஐ கைவிடுவது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுவது, மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவது, மின்சார கணக்கீட்டாளர்களுக்கு கணக்கீடு பணி செய்ய அலைபேசி அல்லது டேப் வழங்குவது, புதிய மின்கட்டண உயர்வை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.