/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
/
கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : பிப் 16, 2025 07:12 AM
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார்.
வெர்டிகல் சொல்யூஷன் நிறுவனத்தின் மனித வள மேலாளர் பிரசாந்த், எச்.டி.பி., பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் சதீஷ்குமரன், ஐசிடி அகாடமி மேலாளர் சுமன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்தனர்.
இவ்வளாக தேர்வில் நுாறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் விக்னேஷ் குமார், ஆங்கிலத்துறை பேராசிரியர் முகமது பஸீஹ், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் விஜயகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.